உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அறுகம்பேயில் “சன்செட் வியூ பார்க்” திட்டம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
117 பார்வைகள்

உலகப் புகழ்பெற்ற அறுகம்பே சுற்றுலாப் பிராந்தியத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அத்தியாவசியத் தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் “சன்செட் வியூ பார்க்” (Sunset View Park) தகவல் மற்றும் சேவை மையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அறுகம்பே பாலத்திற்கு அருகில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பல ஆண்டுகளாக உரிய முன்னுரிமை வழங்கப்படாமல் தாமதமடைந்திருந்த இப்பிராந்தியத்தின் அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படும் இத்திட்டத்திற்காக, சுற்றுலாத்துறை அமைச்சினால் முழுமையான நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச தரத்திலான சுற்றுலா மையம்
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்கவின் தலையீட்டுடனும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸவின் தலைமைத்துவ ஒருங்கிணைப்பிலும் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறுகம்பே பிராந்தியத்தை சர்வதேச தரத்திலான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியில் இத்திட்டம் ஒரு முக்கிய ஆரம்ப கட்டமாகக் கருதப்படுகிறது.

அரசியல் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் இணைந்து இத்திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் விரைவாக நிறைவுசெய்து, பிரதேச மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பயன்படும் வகையில் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

40 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ எனும் நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.!

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தையொட்டி எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ‘நீதிக்கான நீள் பயணம்’ என்ற நிகழ்வை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீண்ட காலமாக போராடி…

40 0 0
இலங்கை செய்திகள்

செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுத்திட்ட காசோலைகள் வழங்கி வைப்பு.!

தாய் மற்றும் தந்தையை இழந்த சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 18 குடும்பங்களுக்கு கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் கிராமத்தில்…

47 0 0
இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

59 0 0