உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் விழா.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
96 பார்வைகள்

நிந்தவூர் நடுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பின் (Society of Nintavur Umpiring Education) ஏற்பாட்டில், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (02) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நடுவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும், விளையாட்டின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பேணி வரும் நீண்டகால அனுபவம் வாய்ந்த நடுவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

“விளையாட்டுத் துறையில் நடுவர்களின் நேர்மையான சேவை என்பது ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான முக்கிய அடித்தளமாகும். களத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நடுவர்களைச் சமூகமாக மதித்து கௌரவிப்பது காலத்தின் தேவையாகும்” என நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் அம்பாறை மாவட்ட கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் கௌரவிக்கப்பட்டார்.

மேலும், நிந்தவூர் பிராந்திய விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், அணித்தலைவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுத் துறைப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0