உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யானை தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
154 பார்வைகள்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

சேருநுவர – சோமபுர பகுதியிலுள்ள வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து கடமையில் ஈடுபட்டுவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர், கடந்த வியாழக்கிழமை யானை மின்வேலி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளார்.

யானையின் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டுத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சேருநுவர – சோமபுர எல்.பி. – 01 பகுதியைச் சேர்ந்த எம்.எம். டில்சான் (வயது 38) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்த சேருநுவரப் பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

56 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

70 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

55 0 0
இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு.!

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த உறவுகளுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சி (OMP) காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏற்பாட்டில்…

42 0 0