உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

படு கொ*லை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
123 பார்வைகள்

சுட்டுப் படு கொ லை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌சனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர் நிலக்சனின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் சகாதேவன் நிலக்சனின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து நிலக்சனை நினைவுகூர்ந்தனர்.

யாழ். பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடகக்கற்கை மாணவனும் சாளரம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தனது வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் அதிகாலை 5 மணியளவில் ஆயுததாரிகள் நிலக்சனை வீட்டிற்கு வெளியே அழைத்து, அவரது பெற்றோர் முன்னிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

59 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

39 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0