உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
95 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு “மக்கள் சந்திப்பு” நிகழ்வு, மருதங்கேணி கலாசார மத்திய நிலையத்தில் இன்று (31) காலை 9.30 மணிக்கு மிக பிரமாண்டமான முறையில் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
(கடற்றொழில் நீரியல்வளங்கள் அமைச்சர்) மற்றும் பிரசன்ன குணசேன (போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்) மற்றும் பொதுமக்கள், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் நோக்கோடும், மக்களின் பங்களிப்போடும் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, பிரதேச மக்களுக்குத் தங்கள் கருத்துக்களை அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் நேரடியாகத் தெரிவிப்பதற்கான சிறந்ததொரு தளமாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

59 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

39 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0