உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்; கொழும்பில் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
156 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், அகழ்வுப் பணிகளைத் தடையின்றித் தொடர வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

‘நீதிக்கான மக்கள் சக்தி’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

“செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்” மற்றும் “காணாமல் போன உறவுகளுக்கு நீதி வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டவர்கள்,”செம்மணி இனப்படுகொலையின் சாட்சி”, “செம்மணிக்கு நீதி வழங்கு!”, “தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்” மற்றும் “செம்மணி மனிதப் புதைகுழியின் உண்மையை வெளிக்கொணர்ந்து நீதியை நிலைநாட்டுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் மனித எலும்புக் கூடுகள் பொறிக்கப்பட்ட பெரிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

124 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0