உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விக்டோரியா கல்லூரி நிர்வாகத்தில் ஊழல் மோசடி; ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திய பழைய மாணவன்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
117 பார்வைகள்

யாழ். சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில் உடைக்கப்பட்டு புதிய மதில் அமைக்கப்பட்டது.

குறித்த மதில் அமைப்பதற்கு பெறப்பட்ட அனுமதிகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் முறைகேடாகவும் பெறப்பட்டமை தகவலறியும் சட்ட மூலத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது வலிகாம கல்வி வலயத்தால் இரண்டு கடிதத் தலைப்புக்கள் பரிமாறப்பட்டதுடன் ஒன்றில் திகதி இடப்படாமல் உயர் அதிகாரியின் கையெழுத்து இடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த மதிலை மீள புனரமைப்பதற்கு மட்டும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட கடிதம் வழங்கப்பட்ட நிலையில் யாருடைய தூண்டுதலின் பேரில் முழுமையாக மதில் இடித்து அழிக்கப்பட்டது.

மேலும் தற்போது இடம்பெற்ற 150ஆவது ஆண்டு விழாவுக்கான நிதி பாடசாலையில் அங்கீகரிக்கப்பட்ட முறைமைகளை பின்பற்றாது தனியார் கணக்குகளில் பெறப்பட்டமை தொடர்பிலும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளோம்.

எமது முறைப்பாடுகளை வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் இதுவரை முறையான விசாரணைகள் ஏதும் இடம்பெறவில்லை.

குறித்த மதில் கட்டுவதற்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்பட முன்னரே தவிசாளர் பாடசாலை நிர்வாகத்திற்கு மதில் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

ஆகவே, குறித்த பாடசாலையின் பழமையைப் பேணுவதோடு புதிய விடயங்களை மேற்கொள்ளும்போது உரிய அனுமதிகள் வராது தன்னிச்சையாக செயல்படும் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய தரப்பினர்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கை போதாது இடத்து நீதிமன்றம் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

59 0 0
இலங்கை செய்திகள்

முக்கிய போ*தைப்பொருள் கடத்தல்காரர் கைது.!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, அம்பாறையின் நவகம்புர – தயாபுர கிராமத்தில் வைத்து முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்…

41 0 0
இலங்கை செய்திகள்

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு பிரார்த்தனை நிகழ்வு.!

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் ஆசி வேண்டி கொழும்புப்பிட்டி (கொள்ளுப்பிட்டி) ஜும்மாப் பள்ளிவாசலில் விசேட ‘கிராத்’ (திருக்குர்ஆன்…

68 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது; 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவரான இலங்கையர் கௌரவிப்பு.!

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய ஆளுமைகளில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விருந்தினருக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விசேட நிகழ்வு…

67 0 0