உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
23 வியாழன்

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!

87 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாகத் தனியாக ஓர் ஆய்வை நடத்தி, எந்தக் காலத்தில் மனிதர்கள் அங்குப் புதைக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டறிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும் என ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரிடம் தாம் வலியுறுத்தினர் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களை இன்று (21) சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்தச் சந்திப்பில், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு தளத்தை  ஐரோப்பியத் தூதுவர்கள் நேரில் பார்வையிடவுள்ள நிலையில், இது குறித்துத் தனியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தோம்.

பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் காலத்தில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம், அந்தக் காலப் பகுதியில் அதிகாரத்தில் இருந்தவர்கள் யார் என்பதை இனம் கண்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டினோம்.

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலேயே இலகுவாக நடத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளோம். மாகாண சபையில் தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாததால் அரச அதிகாரிகளே நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினோம்.

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதன் மூலமும், விவசாய மற்றும் மீன்பிடித்துறைகளை மேம்படுத்துவதன் மூலமும் பிராந்திய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்க முடியும் என்பதால், ஐரோப்பிய நாடுகள் இதற்கான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கோரினோம்.

வட பகுதியில் நிலவும் திண்மக் கழிவு மற்றும் வடிகாலமைப்பு போன்ற பாரிய பிரச்சினைகளை நவீன முறையில் கையாள்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் ஐரோப்பியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினோம்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

45 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

44 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

82 0 0