உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்; இதுவரை 10 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
55 பார்வைகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 10 பேருக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

64 வயதான சி.டி. விக்கிரமரத்ன, நேற்று வெள்ளிக்கிழமை காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாகக் கூறி, அதனைப் பெற்றுக்கொண்டு அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தற்கொலையாகக் கருதப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் நடந்த வேளையில், இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மனைவி மற்றும் இளைய மகன் ஆகியோர் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதற்கமைய, கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன், நுகேகொட கோட்டத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அவரது இறுதிச் சடங்குகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்வு.!

அக்கரைப்பற்று பைத்துல் ஹிக்மா கல்லூரியின் அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இரு சிறந்த கல்வி நிர்வாகிகளை கௌரவிக்கும் வகையில்…

21 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 10 குளங்களை முழுமையாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை.!

அரசாங்கத்தின் 1000 குளங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ( ‘வாரி மஹிம’ ) மன்னார் மாவட்டத்தில் 10 குளங்கள் முழுமையாக, விரைவாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்றன. அந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

நடைபவனியில் சுமந்திரன் கலந்து கொள்ள மாட்டார்.!

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலையின் அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே…

19 0 0
இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு.!

கொத்மலை பிரதேச சபையின் பொது வாசிகசாலையின் ஏற்பாட்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு தவலந்தனை தொண்டமான் கலாச்சார…

24 0 0