ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் மாயம்!
நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று 13 ம் திகதி மதியம் இடம் பெற்றுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 10 பேர் இன்றைய தினம் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் பாடசாலைகளில் நடத்தப்பட்ட பரிட்சையை எழுதிவிட்டு வோல்ட்ரீம் தோட்டத்திற்கு அருகே உள்ள ஆக்ரா ஓயா ஆற்றுக்கு நீராடச் சென்றுள்ளனர்.
நீராட சென்ற 10 மாணவர்களில் ஒன்பது மாணவர்கள் கரை திரும்பிய போதிலும் ஒரு மாணவர் மாத்திரம் கரை திருப்பவில்லை.
இவ்வாறு காணாமல் போன மாணவர் மிளகுசேனை (பியபீல்ட் ) தோட்டத்தை சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது ) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரை தேடும் நடவடிக்கையில் லிந்துலை பொலிசார் மற்றும் பிரதேச வாசிகள் முன்னெடுத்து வருகின்றனர்.