உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பழிவாங்கும் என்.பி.பி. அரசுக்கு எதிராக எதிரணிகள் ஓரணியில் திரள வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருநாகலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் சிவில் அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஆட்சியாளர்கள் விரோதிகளாகவே கருதுகின்றனர் என்றும் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டினார்.

மேலும், அரச நிதி மோசடி சட்டம், அரசியல் மற்றும் சிவில் உரிமை சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி அரசியல் எதிர்ப்பாளர்களை அரசு இலக்கு வைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் தரப்பினர் மேற்கொள்ளும் ஊழல், மோசடிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், நிலக்கரி மோசடி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைக்குழு, ஆளும் தரப்பினரைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியாகவே செயற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா முன்பே குறிப்பிட்டுள்ளமை, சுயாதீன நீதித்துறையின் கௌரவத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

“பேச்சு சுதந்திரத்தை முடக்கி, சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க அரசு முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலையாய கடமையாகும். எனவே, அரசின் இந்த அடக்குமுறைப் போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் ஓரணியில் திரள வேண்டும்.” – என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0