உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணையால் பயனில்லை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
60 பார்வைகள்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நாடாளுமன்றத்தில் அரசுக்கு 160 உறுப்பினர்களின் பலம் உள்ளது. ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போதைய சூழலில் ஒரே கொள்கையுடையவர்களாகச் செயற்படுவதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு மிக எளிதாகத் தோற்கடித்துவிடும். எனவே, இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை.” – என்றார்.

நீதித்துறையைப் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிகளைச் சரியாகக் கையாளுவதற்குப் பக்குவமும், முதிர்ச்சியும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய சீலரத்ன தேரர், அமைச்சர் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே செயற்படுகின்றார் என்றும் சாடினார்.

“நாடாளுமன்றத்துக்குள் மன்னிப்புக் கோருவது மட்டுமே தீர்வாகாது. நீதி அமைச்சின் பொறுப்பு என்பது கண்ணீர் சிந்துவதோ அல்லது நாடகமாடுவதோ அல்ல. மாறாக, சிறைச்சாலைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான மருத்துவப் புனர்வாழ்வு மற்றும் நிர்வாகத் தீர்வுகளைக் காண்பதே ஆகும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நாட்டின் ஒட்டுமொத்த சிறைச்சாலைத் துறையும் இன்று சீர்குலைந்துள்ளமை அரசின் நிர்வாகப் பலவீனத்தையே காட்டுகின்றது. கௌரவமான அரசியல் பின்னணி கொண்ட ஒருவரின் மகனாக இருந்தும், அமைச்சர் செயற்படும் விதம் நீதி அமைச்சுக்கே அவப்பெயரைத் தேடித் தருகின்றது.” – என்றும் சீலரத்ன தேரர் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

69 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

72 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

59 0 0