உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மலையக மக்களை ஏமாற்றுகின்றதா அனுர அரசு? – மனோ கணேசன் கேள்வி

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
77 பார்வைகள்

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தினார்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“எங்கள் மக்கள் ‘தேவதூதர்கள் வந்துவிட்டார்கள்’ என நம்பி இந்த அரசுக்கு வாக்களித்தனர்.

ஹட்டன் பிரகடனத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப் பெற்ற அரசு, தற்போது அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இது தொடர்பில் தமக்கான கொள்கையை வெளிப்படையாகவும், வார்த்தை ஜாலங்கள் இல்லாமலும் அரசு அறிவிக்க வேண்டும்.” – என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், நிறுவனங்கள் வெறும் குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டிய அவர், தோட்டங்களில் மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை ‘அத்துமீறியவை’ எனக் கூறித் தடுப்பதற்கும், உடைப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசு நிறுவனங்களே அனுமதி வழங்குகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள கண்காணிப்புப் பிரிவு மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சித்தார்.

மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அரசின் காணி உரிமை கொள்கை வரையறுக்கப்படும் வரை, வீடில்லா மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை ‘அத்துமீறியவை’ எனக் கூறி வழக்குத் தொடர்வதையோ அல்லது அவற்றை உடைத்து அகற்றுவதையோ உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்றும் மனோ கணேசன் எம்.பி. வலியுறுத்தினார்.

நல்லாட்சி அரசின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற ஒப்புதலுடன் ‘ஏழு பேர்ச் காணி, தனி வீடு’ என்ற உரிமையைச் சட்டபூர்வமாக ஆரம்பித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

200 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய அந்தப் பயணத்தை, இந்த அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0