உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
79 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் தொடர்ச்சியாக அத்துமீறி நுழைகின்ற இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் இறங்கு துறைகளுக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையை கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சரிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச செயலாளர் என்.எம்.மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று சனிக்கிழமை(11) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகள், அதேபோன்று அண்மையில் இந்திய மீனவர்கள் இலங்கை எல்லையைக் கடந்து எமது இறங்குதுறை வரைக்கும், அதாவது மீனவர்கள் மீன்பிடிக்கும் இடம் வரைக்கும் வந்த விடயங்களை நான் இந்த ஊடக வாயிலாக உரிய தரப்புக்கு தெரிவிப்பதற்காக இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றேன்.

குறிப்பாக, இந்த சட்டவிரோத மீன்பிடி முறைகள் தொடர்பாக பல விடயங்கள் மன்னார் மாவட்டத்திலும் வடக்கிலே காணப்பட்டாலும் மன்னார் மாவட்டத்திலே தொடர்ச்சியாக இது காணப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாக காலப்பகுதிகளிலே இந்தத் தொழில் முறைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் குறிப்பிட்ட தூரம் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கக் கூடிய அனுமதியை கடற்படையும் வழங்கியிருந்தது.

இருந்தபோதிலும், அந்தப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து கடல் உணவுகளையும் அறுவடை செய்து, அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை அன்றைய காலப்பகுதியிலே அவர்கள் செய்து வந்தார்கள்.

2009-க்கு யுத்தம் நிறைவுக்குப் பின்னர் படிப்படியாக அரசாங்கம் வேண்டிய தூரம் சென்று கடலில் நீங்கள் மீன்பிடிக்கலாம் என்று அந்த சூனியப் பிரதேசங்களை அகற்றிய பிறகு, இந்தத் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் எல்லை தாண்டியதாக இருக்கிறது.

டைனமட், சுருக்குவலை, இழுவைப் படகுகள் அதேபோன்று தங்கூசி கொண்டு தொழில் பிடிக்கும் முறைகள், அவ்வாறான 14 வகையான தடை செய்யப்பட்ட தொழில் முறைகளும் இப்போது இந்த வடக்குக் கடற்பரப்பிலும் அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது.

இதை நாங்கள் தடுப்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்தாலும், மன்னார் மாவட்டத்தில் எங்களுக்குள்ளே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற பல மீன்பிடி கிராமங்கள் தோறும் இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்களை தங்களது வாழ்வாதாரம் என்று கூறிக்கொண்டு செய்து வருகிறார்கள்.

நாங்கள் கிராமங்களைக் குறிப்பிடப்பட்டாலும், குறிப்பிடாவிட்டாலும் உண்மையிலேயே யார் யார் என்ன தொழில் செய்கிறார்கள் என்று அந்தந்த கிராமங்களுக்கு தெரியும். எனவே, இதில் நான் குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது இந்த விடயத்தில் ஒருவரைக் குறிப்பிடவோ நான் இந்த ஊடக சந்திப்பை செய்யவில்லை.

நாங்கள் தலைவர்கள் பல்வேறுபட்ட கூட்டங்களிலே பங்கு பெற்றுகின்றோம் பல மாகாண கூட்டங்களிலும் நாங்கள் பங்குபற்றியிருக்கிறோம்.

ஆனால் குறிப்பாக, மன்னார் மாவட்டத்தில் பேசும்போது சில விடயங்களை நாங்கள் தடுப்பதா அல்லது மௌனமாக இருப்பதா என்ற கேள்வியும் எழுகின்றது.

இந்தத் தடை செய்யப்பட்ட தொழில்கள் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமான போராட்டங்களாக இருக்கட்டும் அல்லது பல அரசியல் தரப்புகளைச் சந்தித்து நாங்கள் மனுக் கொடுத்த விடயங்கள் போன்ற பல விடயங்கள், பேசிய விடயங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றன.

ஆனால் அவை அனைத்துமே பலனற்று உள்ளது. நாங்கள் 2009 இல் எப்போது கலைக்கத் தொடங்கினோமோ அப்போதிலிருந்து இன்று வரைக்கும் அந்த விஷயத்தைத் தான் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். எனவே, ஒரு விடயமும் தீர்ந்ததாக இல்லை. பல அரசுகள் வந்து போய்விட்டன.

தற்போது கூட புதிய கடற்றொழில் அமைச்சர் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறுகின்றார். அவரை நாங்கள் பல தடவை சந்தித்து விட்டோம்.

கடந்த அரசாங்கங்களில் இருந்த கடற்றொழில் அமைச்சரை விட இப்போது இருக்கின்ற அமைச்சர் பொறுப்பெடுத்து ஒன்றரை வருடங்களிலே அவரை 15 தடவைக்கு மேல் நாங்கள் சந்தித்து எங்களது பிரச்சினைகளை வலியுறுத்தி, இந்த விடயங்களைத் தீர்த்து தாருங்கள் என்று கோரியிருந்தோம்.

ஒரு இணக்கமான செயல்பாட்டுடன் நாங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அமைச்சரிடம் அணுகினாலும், அமைச்சர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிறுத்தலாம், இதை நிறுத்தலாம், உங்களுடைய அபிப்பிராயம் என்ன என்று கேட்டுப் பெறுகிறாரே தவிர, எதுவுமே அவர் செய்வதாக இல்லை.

எனவே, இந்த விடயத்திலே கடந்த கால அரசாங்கம் செய்த தவறை தான் இப்போது இருக்கின்ற அரசாங்கமும் செய்து வருகிறது. எந்தச் சட்டவிரோத மீன்பிடியும் இங்கு நின்றபாடில்லை.

குறிப்பாக, உள்ளூர் இழுவைப்படகு தொடர்பாக 2020-லே புத்தளத்தில் ஒரு வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது, சமூக கடல் சூழல் சார்ந்த ஒரு அமைப்பினால் அங்கு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 23 பேருக்கு எதிராக வழக்கு போனது.

ஆனால், இறுதியில் அந்த 23 பேரும் “நாங்கள் அவ்வாறான தொழிலைச் செய்யவில்லை” என்று சொன்னார்கள். திணைக்களமும் “நாங்கள் அவ்வாறான தொழிலுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று சொன்னார்கள். எனவே சட்டவிரோத மீன்பிடி தொழிலை நிறுத்த எந்த தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0