உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஆட்சியாளர்களின் இயலாமையை மறைக்கவே சிறைச்சாலைக் குழப்பங்கள் – அருள் ஜெயந்திரன் சந்தேகம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
42 பார்வைகள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஆட்சியாளர்களின் மோசடிகளை மூடிமறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் சிறைச்சாலை குழப்பங்களும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றனவோ என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சில தினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவம், பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.

அத்துடன் இது நாடு முழுவதும் பெரும் கொதிநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம் இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது ஒரு அச்சம் மிகுந்த காலமாகவும், பழிவாங்கும் உணர்வு மேலோங்கிய மாதமாகவும் மாறியுள்ளதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

இத்தகைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைக்கின்றன.

ஒருபுறம் இவ்வாறான குழப்பங்களை உண்டாக்கி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஆட்சியாளர்கள், மறுபுறம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் காலம் கடத்தி வருகின்றனர்.

தேர்தலை நடத்துவோம் என ஊடகங்கள் வாயிலாகப் போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

எனவே, தங்களின் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் கையாளும் இவ்வாறான தந்திரோபாயங்களை பொதுமக்கள் தெளிவாக இனங்கண்டு கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0