உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சீனியில் கலப்படம் – களஞ்சியசாலை முற்றுகை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
35 பார்வைகள்

காலாவதியான சீனியைப் புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்குச் சந்தைக்கு விநியோகித்து வந்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர் விவகார அதிகார சபையினரும் வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நேற்று திங்கட்கிழமை அதிரடியாக முற்றுகையிட்டுச் சீல் வைத்துள்ளனர்.

கம்பஹா மாவட்டம், களனி – பேலியகொட பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான பாரிய களஞ்சிய வளாகம் ஒன்றிலேயே இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது. இது குறித்து வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தத் திடீர் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, தற்போது முற்றிலும் காலாவதியாகியுள்ள சீனி இருப்புகளையே இவர்கள் மோசடியாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பழைய சீனியை, காலாவதியாகாத புதிய சீனி இருப்புகளுடன் கலந்து, மீண்டும் புதிய பைகளில் பொதியிட்டுச் சந்தைக்கு விநியோகித்துள்ளமை புலனாய்வு அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கலப்படம் செய்யப்பட்ட சீனி, தற்போதைய சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இந்த பாரிய மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், குறித்த களஞ்சியசாலையில் தலா 50 கிலோகிராம் எடையைக் கொண்ட சுமார் 85 ஆயிரம் சீனி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில், 4.2 மில்லியன் கிலோகிராம் (42 இலட்சம் கிலோ) சீனியை அதிகாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது தற்காலிகமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் பொலிஸாரால் குறித்த களஞ்சிய வளாகத்துக்கு முழுமையாகச் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த மோசடி குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0