உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
79 பார்வைகள்

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை கண்டறியப்பட்டது.

குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல், கெட்டுப்போன காய்கறிகள் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்துதல் மற்றும் கோழி கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது, சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் பிரித்தறியாது அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாக சேமித்து வைத்தல்.

சூடான உணவுகளை தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துதல், உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமை, குப்பைத் தொட்டிகளை மூடியின்றி அசுத்தமாக வைத்திருத்தல் போன்ற குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது.

உணவுப் பொருட்கள் அழிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடி தடை விதித்தனர்.

அத்துடன், குறித்த உணவகத்துக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0