உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
92 பார்வைகள்

கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு விபத்துக்கள் மது மற்றும் போதைப்பொருள் பாவனையினால் இடம்பெறுவதாகவும், இதற்கு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி உரிய பதிலை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தும், குறித்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உடன் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்து இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்கண்ட கோரிக்கைக்கு ஐந்து நாட்களுக்குள் உரிய பதிலை பெற்றுத்தர வேண்டும் எனவும் இல்லாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நேரடியாக தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் s முரளிதரன் தெரிவிக்கையில்,
சம்பந்தப்பட்ட பொலிசார் மற்றும் சம்பந்தப்பட்ட சிவில் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து உரிய தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கிளிநொச்சியில் பிரதான முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

124 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0