உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நியூசிலாந்தை சமன் செய்தது ஈரான்

51 பார்வைகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

தொடர் ஆரம்பமாகிய சில நிமிடங்களிலேயே நியூசிலாந்தின் கிறிஸ் வூட் கொடுத்த அருமையான பாஸை பயன்படுத்தி, எலிஜா ஜஸ்ட் பந்தை கோல் வலையினுள் செலுத்தி தனது அணிக்கு 1-0 என ஆரம்ப முன்னிலையைப் பெற்று கொடுத்தார்.

ஈரானின் தொடர் முயற்சிகளுக்குப் பலனாக 32ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் ஒரு சிறப்பான கோல் அடித்து போட்டியை 1-1 என சமநிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், எலிஜா ஜஸ்ட், தனது இரண்டாவது கோலை பதிவு செய்து நியூசிலாந்தை 2-1 என முன்னிலைக்கு உயர்த்தினார்.

64ஆவது நிமிடத்தில் ரமின் ரெசேயன் வலது புறத்தில் இருந்து கொடுத்த துல்லியமான க்ரொஸை (Cross), ஈரானின் மொஹமட் மொஹேபி ஹெட்டர் மூலம் கோலாக மாற்றி மீண்டும் ஆட்டத்தை 2-2 என சமப்படுத்தினார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

74 0 0