உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

தொற்றாநோயின் தாக்கம் அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணம்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாநோயின் தாக்கத்தின் நிலை அதிகரிப்பதற்கு புகைத்தலே பிரதான காரணமாக இருக்கின்றது. புகைத்தல் அற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் தெரிவித்தார்.

புகைப்பொருள் பாவனையற்ற மாநகரசபையாக மட்டக்களப்பு மாநகரசபையினை பிரகடனப்படுத்தும் வகையிலான பெயர்ப்பலகையொன்று இன்று திரைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் புகையிலை பாவனைக்கு எதிரான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

சர்வதேச புகைத்தல் ஒழிப்பு வாரத்தின் இராண்டாம் நாளான இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் மோகனகுமார், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இளையதம்பி உதயகுமார், வைத்திய நிபுணர்கள், உயர் வைத்திய அதிகாரிகள், மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு இணைப்பாளர் ப.தினேஸ், சிரேஷ்ட சாரண மாணவி செல்வி மதிவண்ணன் ஸ்ருதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது புகைத்தல் பாவனையினால் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அதனை தவிர்ப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் வின்ஸன்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவியினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டதுடன் புகையிலையொழிப்பு வாரத்தின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விசேடமாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலத்தின் நுழைவாயிலில் “சிகரெட் நாற்றமில்லாத பகுதிக்கு உங்களை வரவேற்கின்றோம்” எனும் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன் முச்சக்கரவண்டிகள், ஹோட்டல்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரி எம்.ருதேசன்,
நேற்றைய தினம் உலக புகையிலை எதிர்ப்பு தினம். இந்த புகையிலை பயன்பாடு பற்றி, அதனால்வரும் பாதிப்புகள் பற்றி நம்ம எல்லோரும் அறிந்தது. உலகத்துக்கும் சுகாதாரத்துறைக்கும் பாரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. தொற்றாநோய்களுக்கு பல ஆபத்து காரணிகள் இருந்தாலும், தவிர்க்கக்கூடிய தடுக்கக்கூடிய ஆபத்துக் காரணிகள் பலவற்றுக்குள்ள மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இந்த புகைத்தல் இருக்கிறது.

மரணத்திற்கு முதலாவது காரணியாக இருப்பது மாரடைப்பு. இந்த புகைத்தலானது சுற்றோட்டத் தொகுதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மாரடைப்பு, இரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் இப்படி பல நோய்களுக்கு புகைத்தல் ஒரு காரணியாக இருக்கின்றது.

எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டும், தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அதற்கு பாரிய நடவடிக்கைகள் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். என்றாலும், வர்த்தகத் துறையினரால் அதைவிட பன்மடங்கு கவர்ச்சியான, பல சலுகைகளுடன் கூடிய பல்வேறு வகையான விளம்பரங்கள் செய்யப்பட்டு கொண்டிருப்பதால், எங்களது உண்மையான விழிப்புணர்வு மக்களுக்குப் போய் சேர்வது குறைவாக இருக்கிறது. எனவே, இந்த வகையில் எல்லோருடைய ஒத்துழைப்பும் எங்களுக்கு தேவைப்படுகின்றது.

எனவே, இந்த நாளிலே கல்வித்துறை, நிர்வாகத்துறை, வர்த்தகத்துறை போன்ற சகல துறையினருக்கும் நாம் அன்பாக அழைப்பு விடுக்கின்றோம். இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே மட்டக்களப்பு மாநகர சபையிலே, மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த புகைத்தலை குறைக்க, கட்டுப்படுத்த எல்லோரும் பூரண ஒத்துழைப்பு தரவேண்டும்.

நமது மட்டக்களப்பு மாநகர சபை நகரபிதா அவர்கள் மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டும். மிக விரைவாகவே அவர் மட்டக்களப்பு மாநகர சபையை புகைத்தல் அற்ற பகுதியாக மாற்றுவதற்கான முழு ஏற்பாடுகள் செய்வார் என நாம் நம்புகின்றோம்.

அத்துடன், ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் எல்லோரும் ஒத்துழைப்பு தரவேண்டும். பாடசாலைகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்றால், நீங்கள் அதுக்குரிய பொறுப்பான இடங்களுக்கு தகவல்களை வழங்கவேண்டும்.

4வைத்தியசாலை, பாடசாலை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம், மாவட்ட செயலகம் போன்ற முக்கியமான அலுவலகங்களுக்கு அருகில் எல்லாம் புகைத்தல் பொருட்கள் விற்பதை நாங்கள் முற்றாகத் தடை செய்வதற்கான பூரண முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதோடு மட்டுமில்லாமல் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகைத்தல் பொருட்கள் விற்பனை செய்வது, மாணவர்களுக்கு விற்பனை செய்வதை தடுப்பதற்காக அனைவரும் கவனத்தில் கொண்டுசெயற்படவேண்டும் என உங்கள் அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என எல்லோரும் உணர்வோமாக இருந்தால், இதற்கு எல்லோருடைய பூரண ஒத்துழைப்பு கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0