உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
56 பார்வைகள்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல் முன்னெடுத்துக்கொண்டிருந்த மீனவர்களினால் சடலம் மீட்கப்பட்டு களுதாவளைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் என்பவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்றுள்ள நிலையில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தேடும் பணிகளில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதும் அதில் அவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் இன்று அதிகாலை கல்முனைக்குடிக்கும் கல்முனைக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் அவரது சடலம் மிதத்ததை கண்டு மீனவர்கள் அதனை மீட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலத்தின் மீதான விசாரணைகளை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இளைஞனின் மரணம் தொடர்பில் குடும்பத்தினரால் பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0