உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து போராட்டம்.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் இன்றைய தினம் புதன்கிழமை (15) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து தன்னார்வ பணியாளர்களாக 50இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேவையாற்றி வந்துள்ளனர்.

இதுவரை காலமும் செஞ்சிலுவைச் சங்க மன்னார் கிளையின் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்த போதிலும் எந்தவொரு நிர்வாகமும் தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்து குறித்த போராட்டத்தை இன்றைய தினம்(15) காலை முன்னெடுத்தனர்.

காலை 10 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன் ஒன்று கூடிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளை தன்னார்வ பணியாளர்கள் வாயை சிவப்பு துணியால் கட்டியவாறு பதாகைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக இந்த நிர்வாகங்கள் திட்டமிட்டு தம்மை புறக்கணித்து ஜனநாயக விரோதமாக இடைக்கால நிர்வாகத்தை முறைகேடான விதத்தில் அமைத்து பல்வேறுபட்ட நிர்வாக மோசடிகளை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக பொதுச் சபைக் கூட்டங்கள் எதுவும் இடம்பெறாமல், தனிப்பட்ட சிலரின் விருப்பத்திற்கு அமைய நிர்வாகம் நடத்தப்படுகிறது.

இதுவரை காலமும் எந்தவித ஊதியமோ சலுகைகளோ இன்றி, மன்னார் மக்களின் மனித நேயத்தைப் பேணும் சமூகப் பணியை செய்து வரும் தன்னார்வ பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

தகுதியின் அடிப்படையில், நியாயமான முறையில் எமக்கான “அங்கத்துவத்தை” உடனடியாக உறுதி செய்தல் வேண்டும்.

முறையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள “இடைக்கால சபை” கலைக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர் தலைமையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், ஜனநாயக அடிப்படையில் சுயாதீனமான “பொதுச்சபைக் கூட்டம்” நடத்தப்பட வேண்டும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையினால் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்திட்டங்கள் தொடர்பான விபரங்கள், “வெளிப்படைத்தன்மையுடன்” காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான செஞ்சிலுவைச் சங்கத்தின் “யாப்பில்” குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் மன்னார் கிளைக்கும் பொருந்தும் என்பதை, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மீள்பரிசீலனை செய்து, இதற்கென தனியான “விசாரணைக் குழு” ஒன்றை நிறுவ வேண்டும், இடைக்கால சபையை கலைத்து நியாயமான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நிர்வாகத்தைத் தெரிவு செய்தல் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0