உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நாட்டில் 16 இலட்சம் பேர் சுகாதார சேவைகளை பெறுவதில் தடை! வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிசுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி, இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தோடு மட்டுமின்றி சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்வையிடுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


அவர், இலங்கையில் சில முன்னேற்றங்கள் இருந்தாலும், இயலாமையுடைய நபர்கள் இன்னும் பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை தடைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார்.

இதனைத் தீர்க்க அரசாங்கம் தேவையான கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதாகவும், சுகாதாரத் தகவல்களை பல வடிவங்களில் வழங்க அவசியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதியமைச்சர், பாரம்பரிய மருத்துவக் கண்ணோட்டத்தை கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் சுகாதார சேவையை வழங்குவதற்காக பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.


இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் சர்வதேச தேர்தல் முறைமைகள் ஆதரவுடன் நிகழ்ந்த இச்செயலமர்வு, நாட்டில் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களின் சுகாதார சேவை உரிமையை முன்னெடுக்கும்விதமாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0