உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை – ஜனாதிபதி விசேட அறை பொதுமக்களுக்கு திறப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியின் விசேட பயன்பாட்டிற்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் விசேட அறை, இன்று (24) முதல் பொதுமக்களின் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார அமைச்சு மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் இணைந்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.

ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, 1000 கட்டில்கள் கொண்ட கொள்ளளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அந்தத் திட்டத்தின்படி ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 1001 ஆம் இலக்கத்தைக் கொண்ட இந்த விசேட அறையும் மேலதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்தது.

வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 42 ஆண்டுகளில் இந்த அறை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஒருவரின் வருகையை எதிர்பார்த்து, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படாமல் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது.

இன்று முதல் இந்த விசேட அறை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் சாதாரண நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரச சொத்துக்களையும் வளங்களையும் மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0