பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார துவாய்கள் வழங்கும் திட்டம்.!
இந்த ஆண்டு முதல், பாடசாலை மாணவிகளுக்கு சுகாதாரத் துவாய்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதில் ஒரு மாணவிக்கு தலா 1440 ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும்.
ஒவ்வொரு மாணவிக்கும் தலா 720 ரூபா பெறுமதியான இரண்டு பெறுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. மாணவிகள் தமது விருப்பப்படி, 08 அணையாடைகள் கொண்ட 12 பக்கெட்டுகள் (தலா 120 ரூபா பெறுமதி) அல்லது 10 சுகாதாரத் துவாய்கள் கொண்ட 08 பக்கெட்டுகள் (தலா 180 ரூபா பெறுமதி) வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலம் வருடம் முழுவதும் சுமார் 1.5 மில்லியன் மாணவிகள் பயனடைவார்கள். கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியுள்ளது.