உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிகாட்டல் குழுவை நியமிக்க அனுமதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
17 பார்வைகள்

இலங்கையின் கல்வி முறையை தற்போதைய அரச கொள்கைகளுக்கு அமைய நவீனமயமாக்கும் நோக்கில், ‘கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய செயற்பாட்டு குழுவை’ நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய மாற்றியமைக்கப்பட்டு, 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், 6ஆம் தரத்திற்கான சீர்திருத்தங்களை 2027 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தச் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த குழு அமையவுள்ளது.

குழுவில் அமைச்சர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0