ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு பாரிய நிதியுதவி.!
ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு ஒதுக்கிய 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 480 மில்லியன் டொலர் வரை அதிகரிக்க ஒத்துழைப்பு தெரிவித்தது. இதிலிருந்து 200 மில்லியன் டொலர் உடனடியாக இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
இலங்கையில் வந்த ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவர் மசாட்டோ கண்டா தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து நாட்டின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு வங்கி எவ்வாறு உதவ முடியும் என்பதை விரிவாகக் கலந்துரையாடினர்.
‘டித்வா’ அனர்த்தத்துக்குப் பிறகுநாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலை திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவளிக்க தயாராக உள்ளது என வங்கி தலைவர் தெரிவித்தார். இவர், மத்திய மலைநாட்டின் நீர் கட்டமைப்புகளைப் பாதுகாத்து, மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாதிருக்கும் வகையில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தயாராக இருப்பதும் கூறினார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய உதவிகளைப் பாராட்டி, இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மையை பேணுவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பு என வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் சோனா சிரேஸ்தா மற்றும் இலங்கை அரசாங்கத்தின் தொழில், பொருளாதார அபிவிருத்தி, நிதி அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.