உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கு புதிய பீடாதிபதி தெரிவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் 2026 மார்ச் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மூன்று ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானம் 2026 மார்ச் 24ஆம் திகதி தொழில்நுட்பவியல் பீடத்தில் நடைபெற்ற விசேட பீடக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக்கூட்டம் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்றது.

மேலும், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர், கணினி விஞ்ஞானம் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். தற்போது அவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகள் தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல், தகவல் அமைப்புகள் மற்றும் Internet of Things (IoT) போன்ற நவீன துறைகளை உள்ளடக்கியவை. பல சர்வதேச மாநாடுகளில் அவர் தனது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு கல்வி உலகில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

மேலும், தொழில்நுட்பவியல் பீடத்தின் தகவல் தொழில்நுட்ப திணைக்களத்தின் முன்னாள் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ள அவர், பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவமுடையவர்.

கல்வித் தகுதிகளின் அடிப்படையில், அவர் கணினி விஞ்ஞானத்தில் முதுநிலைப் பட்டம் (MSc) மற்றும் MPhil பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் தற்போது கல்முனையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், சமூக மரியாதை பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சகோதரி கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், அவரது தந்தையார் சாய்ந்தமருதில் அறியப்பட்ட சமூகப் பிரமுகராகக் குறிப்பிடப்படுகிறார்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அனுபவங்களை ஒருங்கிணைத்து பல்கலைக்கழக வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பரின் இப்புதிய பொறுப்பு, தொழில்நுட்பவியல் பீடத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0