உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி மன்னாரில் விழிப்புணர்வு நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

உலக வாய் சுகாதார தினத்தையொட்டி வாயின் மகிழ்ச்சி, வாழ்வின் மகிழ்ச்சி எனும் கருப்பொருளில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

பிராந்திய பல் வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ.றொபேட் சில்வா தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆசாத் எம். ஹனிபா கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட், மாவட்டத்தில் கடமையாற்றும் பல் வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வருகை தந்த மக்களுக்கு வாய் சுகாதாரம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, வாய் சுகாதாரம் இன்மையால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும், குறிப்பாக வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணம் அறிகுறிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, வாய் புற்றுநோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்வது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0