உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

‘உதயம்’ அமைப்புடன் இணைந்து மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கிரிக்கெட் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் அணிகள் பங்குபற்றின.

இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான முழுமையான அனுசரணையை ‘உதயம்’ அமைப்பு வழங்கியது.

கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் சம்பியன் கிண்ணத்தை நோர்வூட் TSC அணியும் இரண்டாம் இடத்தை நுவரெலியா ஈகல் அணியும் மூன்றாம் இடத்தை பொகவந்தலாவ யூனிக் லெவல் அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயமும் போட்டியின் சிறந்த வீராங்கனை, தொடரின் சிறந்த வீராங்கனை ஆகியோருக்கு சிறப்பு கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0