உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கைக்கு பாரிய நெருக்கடி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் எரிபொருள் விலைகளை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்குப் பாரியளவில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றமை மற்றும் போர்ச் சூழலால் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்புச் செலவுகள் உயர்வடைந்துள்ளமை இலங்கையின் எரிபொருள் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய விலை அதிகரிப்புக்கு மத்தியிலும், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் அரசால் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிலவும் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் எரிபொருள் பயன்பாட்டைத் தாமாகவே முன்வந்து மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச நெருக்கடிகளால் இவ்வாறான கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், நிலைமை சீராகாவிட்டால் மே மாதம் முதலாம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள விலைத்திருத்தத்தின் போது மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு விலை உயர்வு அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடிக்கடி எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு அரசு விரும்பவில்லை என்ற போதிலும், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் இதற்குப் பிரதான காரணியாக அமைந்துள்ளது என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் இதன்போது விளக்கமளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0