யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்.!
யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்துத்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே, நல்லூரடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.