உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மக்கள் எதிர்பார்ப்பை சிதைத்து விட்டது அரசு.!.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
45 பார்வைகள்

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் உயர்வடையும். இதன் நேரடி விளைவாகச் சந்தையில் அரிசியின் விலை பெருமளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அதேபோன்று, மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால், நுகர்வோர் மீன்களை அதிக விலைக்குக் கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

தற்போதைய அரசின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் தற்போது சிதைந்துவிட்டன. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு முறையான பொறிமுறையொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” – என்று மரிக்கார் எம்.பி. வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0