உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நேபாளம் வழியாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

யாழ்ப்பாணத்திலிருந்து நேபாளம் ஊடாக இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இளைஞன் ஒருவர், மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். குடத்தனைப் பகுதியைச் சேர்ந்த மூவர், கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசா மூலம் நேபாளத்திற்குப் பயணித்துள்ளனர். அங்கிருந்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்வதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது.

நேபாளத்தில் வைத்து போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று இத்தாலிக்கு பயணிக்க முற்பட்ட போது, அவர்களில் இருவர் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.

இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதிக்கு வந்தடைந்த மேற்படி இளைஞன், அங்கிருந்து படகு மூலம் மீண்டும் இலங்கைக்குத் தப்பி வர முயன்றுள்ளார். இதன்போது இந்திய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டு, தற்போது மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் குடத்தனையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்தியப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0