நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!
மேல், சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை அல்லது சீரற்ற மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக பலத்த காற்று வீசும். மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.