உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யால தேசிய பூங்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு: தப்பிச் சென்ற சந்தேகநபர்கள்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யால தேசிய பூங்கா பகுதியில் இன்று காலை திடீரென நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீன்வல வனஜீவராசிகள் பாதுகாப்புச் சாவடிக்கு அருகில் நடந்த இந்தச் சூட்டில், கார் மூலம் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூட்டைக் நிகழ்த்தியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.


கடமையில் இருந்த வனஜீவராசிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சந்தேகநபர்கள் காரில் ஏறி அதிவேகமாக தப்பிச் சென்றனர். போலீசார், வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடும் நோக்கில் இந்தச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகமூட்டினர். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.


தப்பியோடிய கார் மற்றும் சந்தேகநபர்களைக் கண்டறிய கிரிந்த போலீசார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்து, அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கும் விபரங்களைவழங்கி வீதித் தடைகள் மூலம் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0