உலக சந்தையில் தங்க விலை சரிவு.!
இலங்கையிலும் தங்க விலை பெரும் சரிவைக் கண்டுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் வேகமாக குறைந்துள்ள நிலையில், நாட்டில் ரூ.29,000 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 19ஆம் திகதி 13,000 ரூபா, நேற்றைய தினம் 6,000 ரூபா, இன்று (21.03.2026) 10,000 ரூபா விலை குறைந்துள்ளது.
நிபுணர்கள், உலக சந்தையில் தங்க விலை 5,000 டொலர் எல்லைக்குக் கீழ் விழுந்ததையே இந்த சரிவின் முக்கிய காரணமாகக் குறிப்பிடுகின்றனர். இதன்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை ரூ.357,000 ஆக பதிவாகி, 24 கரட் மற்றும் 22 கரட் பவுண்களின் விலைகளும் கடைசியாக ரூ.10,000 மற்றும் ரூ.9,200 குறைந்துள்ளது. மேலும், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,490 முதல் 4,507 டொலர்களுக்கு இடையே சரிவடைந்துள்ளது.