உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இலங்கை – ஜப்பான் இடையே உயர்மட்ட பாதுகாப்பு பேச்சு! – கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜயசேகர மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோருக்கிடையிலான உயர்மட்ட சந்திப்பு டோக்கியோவில் உள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.


ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இந்தோ–பசுபிக் பிராந்தியத்தில் “சுதந்திரமான மற்றும் திறந்தநிலை” கொள்கையின் அடிப்படையில் பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கையின் பங்கும், ஜப்பானுடனான ஒத்துழைப்பும் முக்கியமானவை என வலியுறுத்தினார்.

பதிலளித்த பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர, இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் புவியியல் முக்கியத்துவம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் வகிபாகத்தை எடுத்துரைத்தார்.கடந்த காலத்தில் ஜப்பான் கடல்சார் சுயபாதுகாப்புப் படை கொழும்புத் துறைமுகம் வருகை மற்றும் இலங்கை கடற்படையுடன் இணைந்து நடத்திய பயிற்சிகள் பாராட்டப்பட்டது.

எதிர்காலத்தில் கூட்டு கடற்படை பயிற்சிகள் மற்றும் பணியாளர் பரிமாற்றங்களை விரிவுபடுத்த இருதரப்பும் ஒத்துக் கொண்டனர்.
மேலும், இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கப்பல்களை வழங்கியமை, வானிலை ஆய்வுத் துறைக்கான ‘டொப்ளர் ரேடார்’ அமைப்பை நிறுவியமை, அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளிக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றுக்கு பிரதி அமைச்சர் நன்றியைக் கூறினார்.


பிரதி அமைச்சர் அருணா ஜயசேகர, சர்வதேச சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மதித்து, இலங்கையின் நடுநிலை மற்றும் பக்கச்சார்பற்ற வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஜப்பானுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதாகவும்மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண திறன்களை மேம்படுத்தும், ஜப்பான் தேசிய பாதுகாப்பு கலாசாலையின் வாயிலாக இலங்கையர்களுக்குப் பயிற்சி வழங்கும் திட்டங்களை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0