வெல்லாவெளியில் இருசக்கர வாகன விபத்து – இருவர் காயம்.!
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி கல்லடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற இருசக்கர வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
37ஆம் கிராமத்தில் விவசாய நிலங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை முடித்துவிட்டு வந்த ஒருவர் பயணித்த இருசக்கர வாகனத்துடன், காக்காச்சிவட்டை கிராமத்தில் இடம்பெற்ற இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு மண்டூர் நோக்கி பயணித்த மற்றொரு இருசக்கர வாகனம் பின்னால் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
