பூநகரியில் இளைஞர்களுக்கான மதச் சுதந்திர செயலமர்வு.!
கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபை மண்டபத்தில், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான மதம் மற்றும் நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான செயலமர்வு நேற்று (19.03.2026) நடைபெற்றது.
மனிதாபிமான அபிவிருத்திக்கான அமைப்பு ஏற்பாடு செய்த இந்த செயலமர்வு, சக கல்வியாளர்களின் வழிநடத்தலில் இடம்பெற்றது. இதில் பூநகரி பிரதேச செயலகத்தின் கலாச்சார உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்.
பூநகரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சுமார் 30 இளைஞர்கள் இதில் பங்கேற்று, மதச் சுதந்திரம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அறிவு பெற்றனர்.இச்செயலமர்வு, இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை வளர்க்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
