உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வடமராட்சி பாடசாலையில் அதிபர் பற்றாக்குறை: பெற்றோர் கையொப்ப போராட்டம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி, கரணவாய் வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தில் நீண்டகாலமாக அதிபர் நியமனம் செய்யப்படாததையடுத்து, மாணவர்களின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.


சுமார் 150 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மாற்றலாகிச் சென்றதையடுத்து, இதுவரை புதிய அதிபர் நியமிக்கப்படவில்லை. தற்போது சிரேஷ்ட ஆசிரியர் ஒருவர் பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.


இந்த நிலைமையை முன்னிட்டு, உடனடியாக புதிய அதிபரை நியமிக்குமாறு வலியுறுத்தி பெற்றோர் நேற்று கையொப்பச் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.மேலும், வடக்கு மாகாண ஆளுநருக்கு மனுவொன்றை அனுப்பி தீர்வு கோருவதற்கான நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0