சற்று முன் யாழில் நடந்த கோர விபத்து.!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, சரசாலை கனகம்புளியடி பகுதியில் இன்று (21) காலை சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற சாலை விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.
புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த பாரவூர்தி வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்திருந்தனர். அவர்களில் தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், சாரதி மற்றும் மற்றொரு பெண் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
