உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

யாழ். வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு முன் மக்கள் போராட்டம் .!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்றையதினம் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், பொதுமக்கள், நோயாளிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வைத்தியசாலையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தபோதிலும், தற்போது இரு வைத்தியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், ஒரு தாதியர் கூட நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், முன்பு 24 மணி நேர சேவை வழங்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது அந்த சேவையை இழந்துள்ளதாகவும், நோயாளர் விடுதி இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால், வட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு அவசர சுகாதார சேவைகள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , ”வைத்தியசாலையை தரமுயர்த்துங்கள், விடுதி இயங்கும் வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை தொழிற்பட வேண்டும், மக்களின் ஆரோக்கியம் எங்கள் உரிமை, சுகாதார சேவைகள் அரசின் கடமை, நோயாளிகளின் உயிர் முக்கியம், வட்டுக்கோட்டை வைத்தியசாலையை புறக்கணிக்க கூடாது, மருத்துவ சேவையில் குறைபாடு வேண்டாம், வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட கட்டட வேலைகளுக்கு நிதியை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0