பேருந்துடன் மோதிய மகிழுந்து போதகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு.!
ஹங்க்வேல் வனஹகொடையில், பாடசாலை மாணவர்கள் செல்லும் பேருந்துடன் ஓட்டோ நேருக்கு நேர் மோதி சம்பவத்தில், ஓட்டோ சாரதி 40 வயதுடைய போதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பிலியந்தலை – ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த இவர், மற்றொருவருடன் ஹைலெவல் வீதியாக அவிசாவளை நோக்கி ஓட்டோ ஓட்டும் பொழுது எதிர்த்திசையில் நுழைந்ததால் விபத்து ஏற்பட்டது.
மோதிய வேகத்தில் ஓட்டோ கைப்பிடி போதகரின் நெஞ்சுப் பகுதியில் ஊடுருவி, அவர் படுகாயமடைந்தார். உடனடியாக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பயணித்த மற்ற நபர் பல காயங்களுக்கு உள்ளாகி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்க்வேல்பொலிஸார் நடத்தி வருகின்றனர்.