உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீதி அமைச்சர் மீது முறைப்பாடு – நாடாளுமன்றில் பதற்றம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது மீது அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அநாகரிக சைகை செய்ததாகச் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தார்.


இதையடுத்து எதிர்க்கட்சித் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டதால், நாடாளுமன்றத்தில் பெரும் பதற்ற சூழல் ஏற்பட்டது. அஜித் பி. பெரேரா, “சபையில் ஊழல்வாதிகளான அமைச்சர்கள் இருப்பதுபோலவே, செயற்திறனற்ற அமைச்சர்களும் உள்ளனர்” என்று குறிப்பிட்டார்.


அஜித் பி. பெரேரா, நீதி அமைச்சர் செய்த அநாகரிகச் செயலை சாட்சியமாக சபையில் அமர்ந்த அனைவரும் பார்த்ததாகக் கூறி, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.


சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உறுப்பினர்களை, “ஒலிவாங்கி வழங்கப்படாதநிலையில் பேசப்படும் விடயங்கள் ஹன்சாட்டில் பதியப்படாது, ஆகையால் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம்” என எச்சரித்தார்.இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நீண்ட நேரம் வாக்குவாதங்கள் நடைபெற்றன

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0