உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மத்திய கிழக்கு போர்: இலங்கை பொருளாதாரத்திற்கு கடும் தாக்கம் – சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம், இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிஸை மாநகர சபை உறுப்பினர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள், மின்சாரம், சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


உலகளாவிய நெருக்கடிகளை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் தவறிவிட்டதாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும், எரிபொருள் விலை உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதி, மின் உற்பத்தி சிக்கல் ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும், எதிர்காலத்தில் உர மற்றும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார்.


தேசிய மட்டத்தில் ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என வலியுறுத்திய அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0