சமாதானமும் வளமும்கொண்ட சமூகத்துக்குப் புதிய நம்பிக்கை தரும் ரமழான் – வடக்கு ஆளுநர் வாழ்த்து.!
வளமானதும் சமாதானமானதுமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ரமழான் திருநாள் புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ரமழான் நோன்பு பொறுமை, தியாகம், சகோதரத்துவம் மற்றும் மனிதாபிமான பண்புகளை வலுப்படுத்தும் புனித காலமாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இன மத பேதங்களைத் தாண்டி ஒற்றுமையுடன் வாழ்வதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உலகளாவிய நெருக்கடிகளின் மத்தியில் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்.
சவால்களைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற இந்தப் பெருநாள் புதிய நம்பிக்கையை வழங்கட்டும் என்றும், முஸ்லிம் மக்களுக்கு இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.