அரச சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கை – பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழு கலந்துரையாடல்.!
அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக உருவான சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தி முகாமைத்துவம் மற்றும் அரச சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்தியாவசிய அரச சேவைகள் இடையூறு இல்லாமல் வழங்கப்படுவதையும், பொதுமக்களுக்கு சேவைகள் தொடர்ச்சியாக கிடைப்பதையும் உறுதிப்படுத்துவதில் குழு முக்கிய கவனம் செலுத்தியது. அதேவேளை, அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பல அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, தற்போதைய சூழ்நிலைக்குஏற்ப செயல் திட்டங்களை ஒருங்கிணைப்பது குறித்து ஆராய்ந்தனர்.