உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி நிலவ வேண்டும் – பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்த சஜித்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

உலகெங்கும் போரின் தீப்பொறிகள் அணைந்து, அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்நேரத்தில், இஸ்லாம் போதிக்கும் மனிதநேய மதிப்புகளை ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் ஆகியவை அமைதி மற்றும் நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்கும் அடிப்படைக் கோட்பாடுகளாக விளங்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ரமழான் நோன்பு, அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் ஆன்மீகத் தூய்மையை வளர்க்கும் முக்கிய காலமாகும் எனவும், இக்காலத்தில் மனிதர்களிடையே கருணை, ஒற்றுமை மற்றும் பரிவு ஆகிய பண்புகள் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உலகின் பல பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு தீர்வாக, பொறுமை, கருணை, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். வெறுப்பை கருணையால் எதிர்கொண்டு, பிளவுகளை ஒற்றுமையால் சமாளிக்கும் அணுகுமுறையால் மட்டுமே உலகளாவிய நெருக்கடிகளுக்கு நிலையான தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.


மக்களின் சிந்தனைகளை நல்வழிப்படுத்துவதன் மூலம் மட்டுமே நிலையான அமைதியை உருவாக்க முடியும் என்றும், ரமழான் காலத்தில் வெளிப்படும் உயர்ந்த மனித பண்புகள் உலகம் முழுவதும் அமைதி மற்றும் சமூக நீதி நிலைநாட்ட உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலகெங்கும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0