உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனைவரினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்ட சுபீட்சமான தேசத்தை உருவாக்க ஒன்றிணைவோம் – நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அழைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த தேசமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு அவர் வெளியிட்ட ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில், ரமழான் நோன்பின் மூலம் ஒழுக்கம், எளிமை, சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த பண்புகள் வலுப்பெறுகின்றன எனக் குறிப்பிட்டார்.


மேலும், உலகம் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் இந்த காலத்தில், அனைவரின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படும் சூழல் உருவாக வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்தார்.

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்ற அரசாங்கம் உறுதியுடன்செயற்பட்டு வருவதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுமாறு அனைவரையும் அழைத்தார்.
முஸ்லிம் சமூகத்தினருக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த இனிய ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

74 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

61 0 0